மாவீரர்கள் மரணம் காண்பதில்லை

ஜெயம்

நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர் விழுந்தது உடலால் மட்டுமே
அவர் வீரமோ வரலாற்றை எட்டுமே

எரிமலைக்கு சமமான பூகம்பத் துளியாய்
குறிபார்த்து தாக்குவதில் பாய்கின்ற புலியாய்
உயிரைக்கூட புன்னகையுடன் அர்ப்பணிப்பார்
உயர்ந்த நோக்கத்துடன் உறுதியாய் பயணிப்பார்

சீவனைவிட உயர்ந்தது தேசத்தின் மண்ணென
காவல் தெய்வங்கள் காத்தாரே கண்ணென
நாம் இருக்கிறோம் வேண்டாமே பயமென
தாம் இருந்தாரே இனத்துக்கு தயவென

மலரொன்றும் அங்கே துப்பாக்கி ஏந்தியது
கலங்காது எதிரியை பலமோடு தாக்கியது
தாய்மண்ணை காப்பாதற்காய் தமைக்கொடுக்கும் ஒப்பந்தம்
மாய்ந்தும் மரணிக்கா மாவீரர் சொந்தம்

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading