நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

மொழியும் கவியும்

ஜெயம் தங்கராஜா

கவி 759

மொழியும் கவியும்

வெள்ளமென உள்ளமதில் எண்ணங்கள் உதித்திடும்
சொல்லெல்லாம் சுவையேற்றி கவிகளை வரித்திடும்
தீட்டித்தீட்டி சொற்களை அமைத்துவிட பாவுக்குள்
கேட்டுவிடவே அதனை தேனூறும் காதுக்குள்

சிந்தையினை குடையக் குடைய அமுதூறும்
விந்தைப் படைப்புக்களாய் அகிலத்தில் அச்சேறும்
தேன்கவிகள் படைத்திட்ட புலவர்களாம் பிறப்பு
வான்புகழைக் கொண்டுள்ள தாய்மொழியாலான சிறப்பு

கற்பனை என்பது அற்புதமான சக்தி
உற்பத்தி செய்துவிடுமதை தமிழெனும் புத்தி
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
தித்திக்கும் செய்யிழுக்குள்ளும் தமிழரின் மதி

செய்யுழுக்குள் செருகிக்கொண்டு மொழிசெய்யும் அழகு
மெய்யாக சொக்கவைக்கும் கவிதைகளின் உலகு
சொல்வளத்தை கூட்டியே எழுதப்படும் பாக்கள்
கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கும் பூக்கள்

இலக்கிய நயங்களாகிய சொல்லாட்சி எழிலே
இலகுவான நடையிலும் படைத்துவிடும் கவித்தொழிலே
படைத்துவிடும் படைப்புகளிலெல்லாம் மொழியின் ஆட்சியே
கிடைத்துவிடும் முகவரிகளெல்லாம் மொழியின் மாட்சியே

ஜெயம்
30-01-2025

Nada Mohan
Author: Nada Mohan