தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மொழியும் கவியும்

சிவருபன் சர்வேஸ்வரி

மொழியும் கவியும்

அமுதமழை பொழியுது அழகாய் பாராய் //
சுவைபடும் சுந்தரத் தமிழே கேளாய் //
கனிதரும் சோலையழகு போன்றே என்றும் //
நறுமணம் வீசிடும் நற்றமிழே உணர்வாய் //
அழகாய் பதமெடு அடுக்காய் தொடுத்திடு //
மலர்வதும் அங்கே கவியும் அழகே //
விலையாய் வருவதும் இல்லையே நன்றாய் //
விதைக்கும் விதையிலே அழகுடன் முளைக்கும் //
பயிரின் செழிப்பைப் பார்த்தே மகிழும்//
கண்களின் ஒளியின் ஊடே காட்சியுமாகும் //
பண்ணுடன் இசைக்கும் நாதம் பாவுதலன்றோ //
மண்ணிலே பிறந்த மனிதத்தின் உணர்ச்சி //
மொழியாலும் கவியாலும் உலகாளும் போதில் //
முத்தமிழாலும் முளங்கிடும் கீதமே எங்கும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading