அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ நினைவாலயம் “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 19.05.2022

கண்ணீரும் செந்நீரும் கலந்த
நந்திக் கடலருகே ஒரு நினைவாலயம்
சிந்திய குருதிக்கும் சிதறிய உடல்களுக்கும்
பலியான பல இலட்ச மக்களுக்கும்
பரிகாரமான அர்ப்பணிப்பு நினைவாலயம்
அவலங்களும் துயரங்களும் அரங்கேறிய
முள்ளி வாய்க்கால் முற்றமதில்
ஆண்டுகள் பதின்மூன்று ஆனபோதும்
ஆறவில்லை இன்னும் காயங்கள் !

நந்திக் கடலோரம் சிந்துபாடி
சந்தணக் காற்றிலே தவழ்ந்த பூமி
கந்தக வாடையில் கலவி
குண்டு மழையினில் சிதறி குருதியாற்றில் குளித்து
வெந்துமடிந்து நொய்ந்து நோய்ந்து
புதைந்து போயினர் மக்கள் புதைகுழி தனிலே
மயானபூமியாகி மெளனித்ததே வலிசுமந்த முற்றம் !

முள்ளிவாய்க்கால் முற்றம் இன்னமும்முனகியபடி
வரலாற்றுக் காவியமாய் வரையாத ஓவியமாய்
காணாமற் போனோர்க்கு இன்றுவரை விடையில்லை
நீதி கோரியபடி தொடர்கிறது போராட்டமும்
எஞ்சிய உறவுகளுக்கு கரம் கொடுப்போம்
துயரம் தீர வழி வகுப்போம் !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading