வசந்தா ஜெகதீசன்

கவி வீச்சு 25

கவி வீச்சின் வீரியத்தில்…
ஈர் பத்துடன் ஐந்தாகப் பிரசுரம்
இ. மாகீசன் இதழாக பிரசவம்
என்னுடன் பலரிணையும் கவிக்களம்
இருபந்தைந்தாம் இதழாகி வெளிவரும்

முன்னுரையும் , முகவுரையும் தேடாது
மண்டபமும் மக்களையும் கூட்டாது
தன்னிதழாய் தனித்துவமாய் மிளிர்வது
ஈரிண்டு வாரத்தின் கோர்ப்பாகும்
இயல்பொன்றும் கவிஞர் குழாமாகும்

அருண்குமாரின் அரும்பணியில்
நூலாகும்
பாமுகத்து நெடுங்கனவு நீள்தொடர்ச்சி
தொழில்நுட்ப வளர்ச்சிநிலை பதிப்பாக்கல்
தொடர்கவிஞர் எண்ணங்களின் எழுத்தாற்றல்
கவிதைகளாய் காணொளியாய் வலம்வரினும்
எழுத்தாற்றல் பேணுகின்ற இலக்கோடு
என் கவியும் கவிஞர்குழாம் நூலாகி
என்றுமே காசினியில் நிலைபெறுமே
ஏற்றத்தின் வழிசெப்பும் தொண்டுப்பணி
நின்றுயர்க! நீடுவாழ்க! இன்றிதுவே சரிதமென இடித்துரைத்து
வருங்கால வழிமுறைக்கு வடிகால் செப்பும்
வானுயர் வாகையுடன் பாமுகத்து
கவிக்களமே நீ வளர்க! கவி வீச்சாய் நீ மலர்க! உடனிருந்து ஊக்கம் சேர் உறவுகளின் பேராற்றல் பெரும்பணிக்கும் என் இதயத்து நன்றி கோடி!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading