முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
வென்றுயராண்டே விழுதெறி….
ஓடி மறையும் ஒற்றை நொடி
உருவாக்கும் ஆண்டின் பெயரைப் பொறி
தினமாய் திகதியாய் திசையெங்கும் ஒளி
திருப்பங்கள் பற்பல பதிகின்ற வழி
தேடலின் வலுவில் திரட்டிடும் ஆற்றல்
தேசமெங்குமே மிளிர்கின்ற கூட்டல்
ஒடும் நதியாய் கலக்குது உலகு
உறைந்துள்ள பொக்கிசம் மாபெரும் அறிவு
மனிதத்தின் சக்தியே மாற்றத்தின் இணையம்
மறுபடி மறுபடி வளர்ச்சியின் இமயம்
தாக்குண்டு தகர்ந்தாலும்
தணியாது வேகம்
தரணியின் வெற்றியை தாங்கின்ற நுட்பம்
மின்னாகி மிளிருமே வேகத்தின் அறிவு
விழுதாகி விளைவதே விண்ணியல் ஆய்வு
எண்ணற்ற ஏறுபடி இசைந்தோடும் ஆண்டே
என்னாளும் உன்வாழ்வு உயர்கின்ற மகுடம்
ஏன் தானோ இறுதியில் இல்லாது விலகும்
எம்வாழ்வும் உன்போல உதிர்கின்ற ஓன்றே
ஏற்றங்கள் இறக்கங்கள் எண்ணற்ற கணக்கே!
நன்றி
விடையனுப்பி வரவேற்கும் கவிதா நிகழ்வே கவிக்களத்திற்கும் அணிதாங்கும் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments