வசந்தா ஜெகதீசன்

உலகே மாயமாய்…
உருளும் உலகின் அசைவிலே
உபாதை நிறைக்கும் வாழ்விலே
முகமூடி வாழ்வே முகத்திரை
முழுமை செலுத்தும் ஒத்திகை

விடியல் மட்டும் எமதாகும்
விடயமேதும் நிகழாது
கருவி எம்மை ஆள்கிறது
கடக்கும் பொழுது விரையமாய்
நிறை குன்றும் செயல்களாய்
ஏற்றம் எதிலும் நிகழாது
இன்றைய வாழ்வின் இயல்பென்ன
ஊரவர் நிலவரம் அறிவதில்லை
பாசம் நேசம் பகிர்வதில்லை
பலராய் ஒன்றித்த மகிழ்வில்லை
வேசம் போடும் வாழ்வு போல்
விரையும் புவியே என்னநிலை
நேற்றைய நினைவு கனிகிறது
இன்றைய வாழ்வு கசக்கிறது
நாளைய வாழ்வின் நிலை என்ன
அறிவுக்கண்ணை திறப்பது யார்
அடுத்தபடி நிலை உரைப்பது யார்
விழித்தெழு தோழமை உறவாடி
விடியலின் முகவுரை நாமாகி
வீழ்தலற்று எழுகை பெற
ஒற்றுமைக் குடையை உயர்வாக்கு!
பெற்றுயர் பேற்றிக்கு வழிகாட்டு
உலகே ஓன்றென உரக்கவிழி!

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading