வண்ண வண்ணப் பூக்கள்…..

ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025

பூமித்தாயின் பூரிப்பில்
பூக்களெல்லாம் வரங்களே
பூமித்தாயை வனப்பாக்கி
பூவையரையும் மகிழ்வாக்குமே
ஆண்டவனுக்கு அர்ப்பணமாக
அர்ச்சனை மலர்களாகி ஆராதிக்குமே
தேனைத் தேடிவரும் தேனீக்கும்
தினம்தினம் திருவிழா இங்கேதான் !

கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்
வண்ண வண்ணப் பூக்கள்
காலையில் மலர்வது அல்லிப்பூ
கருக்கலில் முகிழ்ப்பது மல்லிகைப்பூ
கதிரவன் வரவினில் தாமரைப்பூ
காதலின் சின்னம் ரோஜாப்பூ !

செம்பவள நிறமாம் செம்பருத்தி
செங்காந்தள் மலராம் எம்தேசீயப்பூ
செம்மஞ்சள் வண்ணமாம் செவ்வந்தி
கொத்தான பூவாம் சாமந்தி
கெத்தான அதிசயப்பூவாம் குறிஞ்சி
வாடும் பூவும் சொல்லும்
வாழ்வின் அழகு நிறைவில்தானென்று !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading