வதைகளும் வாதைகளும்

ரஜனி அன்ரன் (B.A) “வதைகளும் வாதைகளும்” 26.06.2025

அப்பாவிகளை அடிபணிய வைக்க
அடியாட்களை வைத்து வதை செய்ய
மூளைச் சலவை செய்ய
இல்லாததை ஒப்புவிக்க
சித்திரவதைகளும் வாதைகளும்
சில்லறையாகி விட்டதே உலகப்பரப்பில் !

சித்திர வதைகளைத் தடுக்கவே
அச்சாரமாய் உருவாக்கியதே ஐ.நா.மன்றும்
ஆனித்திங்கள் இருபத்தியாறினை
அகிலஉலக சித்திரவதைகள் தடுப்புத்தினமாக !

குற்றங்களை ஒப்புக் கொள்ள
தகவல்களைப் பெற்றுக் கொள்ள
சரணடைய வைக்கவென
சாத்தியமானதே வதைகளும் வாதைகளும் !

மனிதனால் மனிதனுக்கு இழைக்கும்
மனிதாபி மானமற்ற செயல்களைத் தடுக்க
குற்றமற்றவர் பாதுகாக்கப்பட
வதைகளைத் தடுக்க
வாதைகளைக் குறைக்க
கீதையாய் வந்ததே மன்னுலகில்
சித்திரவதைகள் தடுப்புத்தினம் !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading