தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
வர்ண வர்ணப்பூக்களே
ஜெயம்
மண்ணிலே மலரும் அழகுக்குவியல் பூக்களாய்
கண்களும் நாடியதை மொய்த்துவிடும் ஈக்களாய்
அலங்கரிக்கும் பூமியை எழில் வண்ணங்களைக்கொண்டு
மலர்களால் மகிழ்ச்சியும் மண்ணுலகிற்கு உண்டு
ஒவ்வொரு பூக்களுக்கும் வெவ்வேறு மணமுண்டு
ஒவ்வொன்றையும் முகர்ந்தாலே றெக்கைகட்டும் மனவண்டு
இயற்கையின் அதிசயமாக பூக்களின் வண்ணம்
நிஜத்தினில் அவனியில் அழகான சின்னம்
புத்துணர்ச்சி தந்துவிடும் புன்னகைக்கும் பூக்கள்
சித்தத்தை மயக்கவைத்து எழுதவைக்கும் பாக்கள்
கொஞ்சும் வண்ணங்களைக்கண்டு விழிகள் சொக்கிப்போவதுமுண்டு
தஞ்சமே பூவனமென இரசனை தீவனமாக்குவதுமுண்டு
சின்னசின்ன பூக்கள் சிருங்கரமாய் விரியும்
வண்ணவண்ண இதழ்களோ பொழிவினை சொரியும்
கண்களை ஈர்த்துவிடும் கவர்ச்சியின் தோற்றம்
மண்ணிலே மலர்களே அழகுக்கான தேற்றம்
புலரும் பொழுதிலும் கொத்தாக சிரிக்கும்
நிலவின் இரவிலும் கவர்ச்சியை தரிக்கும்
03/07/2025
