“வல்லமை தாராயோ”

நேவிஸ் பிலிப் கவி இல(375) 02/01/2025

நெஞ்சிலே துணிவோடு
நேர்கொண்ட பார்வையுமாய்
அஞ்சியஞ்சி வாழ்ந்திடாது
வஞ்சமகற்றி வாழ்ந்திடவே
மாற்றங்கள் தாராயோ
மலர்ந்திட்ட புத்தாண்டே,!!!

ஆலய மணியோசை ஒலித்திடவே
இல்லமெல்லாம் இன்னிசை பரவிடவே
மன இசைவு ,ஓரிசைவாயிணைந்திடவே
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்

இறுகிய மனங்களெல்லாம்
தளையறுந்து மேன்மை கொள்ள
கண்ணியமாய் வாழ்ந்திடவே
திண்ணமாய் உறுதி கொள்ள
ஒரு கணமே போதுமானதாய்

தோல்வி கண்டு வீழ்ந்திட்டோம்
எழுந்தென்ன பயனெனவே
தயங்கிடாதே மயங்கிடாதே
வலிமை கொள் மனமே

காரிருள் ஊடறுத்து
கதிரவனும் ஒளியேற்ற
பரந்து விரிந்த பாரெல்லாம்
நமதேயென நம்பிக்கையோடு

பண்போடு வாழ்ந்திடுவோம்
மாற்றங்கள் கண்டிடுவோம்
ஏற்றங்கள்கொண்டிடுவோம்
வலிமை சேர்ப்போம்
நல்லினிய புத்தாண்டே
வல்லமை தாராயோ???
அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading