தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
வாழ்வியல் கலையும், தொடரா நிலையும்
தமிழ் வரலாறு சொல்லும் வாழ்வியல் கலைகளை
வாழவைக்கின்றோமா ?அவற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா?
மனிதனின் தோற்றத்தின்
வளர்ச்சிப் படிகளே
கலைகளின் வளர்ச்சி.
வாழ்வியல் கலைகளுடன்
சிலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்
கூத்து, பாட்டு என வளர்ந்த
என் வாழ்வில்
இக்கலைகளை
மறக்கத்தான் முடியுமா ?
சிலர் குறை கூறல்களுடன் மட்டுமே தொடரும்
இக்கலைகளை
அவரவர் முன்னெடுப்புக்களால்
அடுத்த நிலைக்கு
உயர்த்த முடியாதா?
புலத்தில் சில பள்ளிகள்
இக்கலைகளை
வளரும் தலைமுறைகள்
இடையே கொண்டு வருகின்றனர்.
லண்டனில் சுடர் கலைப்பள்ளி ஆசிரியரின் முன்னெடுப்புடன் பாமகத்தின் அனுசரணையுடனும் வருடம் தோறும் நாட்டார் கதம்பம் மூலம் இக்கலைகள் மேற்பார்வை செய்யப்படுவதை நீங்கள் அறிவீர்கள் தானே!
இயக்குனர் நடாமோகன் அவர்கள் தமிழ் மண் வளக் கலைகள் ஊக்குவிப்பு மாதம் என பெயரிட்டமை
நீங்கள் அறிவீர்கள் தானே?
இக்கலைகளுடன் வாழும் கலைஞர்களை
மதித்த்து
எம் வரலாற்றை
நாம் அறிவும்
அறிய வைப்போம்.
நன்றி
