வாழ்வில் கலையும் தொடரா நிலையும்

ஜெயம் தங்கராஜா

கவி 760

வாழ்வில் கலையும் தொடரா நிலையும்

காலங்கள் போக எல்லாமும் மாறும்
ஞாலத்தின் பரப்பிலே நுட்பங்கள் மீறும்
பழையவை அருகி புதியவை புகுந்திடும்
நுழைந்துமே புதுமை மாற்றத்தை நிகழ்த்திடும்

பண்டைய காலத்தின் மனிதனின் செயற்பாடு
இன்றைய காலத்தோடு ஒட்டாத வெளிப்பாடு
அன்றைய கலைகளை நினைக்கவும் நேரமில்லை
பண்பாடு கலாசார பெருமையிலும் நாட்டமில்லை.
பாரம்பரிய நிலை இயலாத வழியாய்
காரணம் நவீனத்தின் உள்ளடக்கம் எளிதாய்
விட்டுவிட்டுப்போன நம் முன்னோர்களின் பழக்கநிலை
கற்றுக்கொண்டு தொடராத துர்ப்பாக்கிய நிலை

தலைமுறைக்கு இங்கே கடத்திவிட துடித்தும்
நுழைத்துமே வாழ்வியலுள் பயனடைய முயன்றும்
அந்தக்கால பன்முக பண்பாட்டு அடையாளம்
இந்தக்கால வாழ்க்கையோ புறக்கணித்ததை நீளும்

ஆக்கப் பயன்படும் பயன்தரு கலைகள்
தேக்கியதை தொடராத இக்கால நிலைகள்
கலை தன் கட்டுக்களை உடைத்தெறிந்ததா
இல்லை அப்படியில்லையெனின் விடை தெரிந்ததா

ஜெயம்
06-02-2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading