தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வெறுத்ததே விருப்பதாய்…

சிவதர்சனி இராகவன்

தினக்கவி 2091

வெறுத்ததே விருப்புமாய்..

ஓடியாடி வளர்ந்த மக்காள்
ஓய்வு காண விடுவாரில்லை
சினத்தோடு வெறுப்பினையும்
மனத்தினிலே இருத்தி நின்றேன்
வீடு வாசல் நாசமாய் போகும்
விளையும் துயரம் இதனாலென்றே
எத்தனை பாடு தலையிலடிக்க,
அத்தனை வாக்கும் செவி வீழா
சித்தமே அதுவென வந்து சேர
குழந்தை ஒன்று இல்லத்தில்
குலவி மகிழ துயரம் விலக
கூடு குலைந்து குருவிகள்
தனித்தனி கூட்டுக்குள் முடங்கி
கிடந்த காலம் கிடப்பிலோட
மீண்டுமோர் வசந்த காலமாய்
கோலம் மாற்றிக் கும்மாளம்
நான்கு கால் ஜீவனால்
விளைந்த சந்தோச மேகம்
குழவியாக மாறின மனங்கள்
குழைந்து குழைந்து கொஞ்சின
இப்போ வெறுப்பே விருப்பாய்
இதுவே சுகந்தமாய் நிற்க
நான்கு கால் உயிரும்
நல்லாய்க் காலூன்றியதே…!!
சிவதர்சனி இராகவன்
16/1/2025

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading