300வது வாரம், சந்தம் சிந்தும் சந்திப்பு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025

பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய் தோறும் வரவேற்ப்பாய்

பாவை அண்ணனின் திறனாய்வாய்
பலவாய் கவியும் மேம்படுதே
வாரம் தோறும் வளர்கின்றோம்
வேர் போல் ஆசான் தாங்களல்லோ

விடுப்பு எடுத்து சென்றாலும்
தொடுப்பாய் தானும் நின்றிடுவீர்கள்
கடைசி நிமிடத்திலும் ஞாபகத்தொடுப்பாய்
கவிதை புனைய வைப்பவரே

தங்கள் சேவை சிறப்பேயிங்கு
தளம் தந்து ஊக்குவிக்கும் அதிபருக்கும்
தொழிநுட்பத்தோடு எடுத்தாளும் நாயகிக்கும்
சந்தந்தில் சந்திக்கும் மதிமகன் அண்ணாவோடு

தாங்கி விழுதாயிருக்கும் அனைவரையும்
இருகரம் கூப்பிய நன்றியோடு
முன்னூறைத் தொட்ட முகமலர்வோடு
சாதித்த சங்கதியில் நானுமிங்கே

Nada Mohan
Author: Nada Mohan