அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆர்ணா
“””””””””””””””””””””””””””””””””””

அழகாய் அழகாய் ஆர்ணா பிறந்தா!
அன்பால்.. வளர்ந்தே….அறிவால்.. நிறைவா!
(அழகாய்2)

பழகிப் பழகிப்…பாசம் வளர்ப்பா!
பண்பில்…நிறைவா …பரிவைத்… தருவா!
குழந்தைக் குணத்தில் குறும்பாய்க் குழைவா!
கூடும்…உறவின்..கொடையும்…இவளே!
(அழகாய்)
இளமை என்றும் இனிமை இவளே!
இயங்கும்…அழகில்..எல்லாம்…இவளே!
வளரும் அன்பின் வாசம் இவளே!
வாய்ச்சொல்…கனிவின்…வண்ணம்…இவளே!

உலகில் உயிர்ப்பின் உருவம் இவளே!
உணர்வைக்…கணிக்கும்..உண்மை…இவளே!
கலக்கும் உறவின் காவல் இவளே
கணத்தில்…மயக்கும்..கண்ணும்…இவளே!
(அழகாய்)
வீசும் தென்றல் வீச்சும் இவளே!
விரையும்…பொழுதின்..விளக்கம்…இவளே!
பேசும் மழலைப் பேச்சும் அழகே!
பெருமை…இவளால்..பெற்றோம்…நாமே!

அழகே அமுதே அறிவின் சுடரே!
ஆசைக்…கனியே..அருமைப்…புகழே!
பழகும் தமிழே பாலின் சுவையே!
பாரில்…நீயே…பண்பின்…உயர்வே!
(அழகாய்)
பேசுங் கிளியே பெருமை நீயே
பெற்றோம்…உனையே…பேறே…நீயே
ஆசுங் களையும்.. அன்பின் ஊற்றே
அன்னை…தந்தை…ஆனார்…இவரே

ஊரும் உறவும் வாழ்த்தும் உயிரே
ஊறும்…அன்பின்…உலகம்…நீயே!
பேரும் புகழும் பெறுவாய் நன்றே
பேரன்…பேர்த்தி..பெற்றோம்…பயனே!

(அழகாய்)

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading