இனிவரும் காலம்..

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய் ஆகிடும் வன்மம்...

Continue reading

சோகச் சுமை 784

செல்வி நித்தியானந்தன் சோகச் சுமை காற்றுடன் மழையும் கனதியாய் பெய்ய கடும குளிரும் சேரந்தும் வந்திட விடுமுறை சென்று வியாதியை தேடி வீட்டினுள்...

Continue reading

“நினைவுகள்”

நேவிஸ் பிலிப் கவி இல((674)

காலச் சுவடுகளில் பொறித்த
அழியாத நினைவலைகள்
கடந்த கால வலியும் மகிழ்வும்
கூட்டலும் கழித்தலுமாய்

தோல்வியும் சோகமும் தந்த
கசப்பான அனுபவங்கள்
வெற்றியின் தருணங்கள்
மகிழ்வான நினைவுகளாய்

பகுத்தறிந்த சிந்தனைகள்
வகுத்தன நற் பாதைதனை
தொகுத்து வைத்த எண்ணங்கள்
உள்ளமெங்கும் நிறைந்திருக்கும்

நேற்றைய நினைவுகள்
நிழலாய் என் இதயம் தொட
மாலையாய் என்நெஞ்சில்
மலரும் நினைவுகள்

நல்லதெல்லாம் நினைத்திருந்தால்
வசந்தமெங்கும் பரவி நிற்கும்
தொல்லையின்றி வாழ்ந்திடவே
நினைவுகளே கை கொடுக்கும்,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading