கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பாமுகம்

முத்தமிழ் வளர மலரும் நிகழ்வை
எத்தனை சிறப்புடன் எளிமையாய் நகர்த்திட
சித்தங் கலங்காச் சீர்மை யுடனே
சொத்தாய் பாமுகம் சுகமும் காண

பண்ணாக இருவரும் பண்புடன் சுமந்து
மண்ணும் மணம்வீச மாந்தரும் மகிழ்வுற
எண்ணற் றோரும் ஏற்றமாய் அளித்த

ஊக்கத் திலேயும் உறுதியாய்ப் பாமுகம்
நோக்கக் குறியும் நொடிப் பொழுதுமே
மாறாமல் வெள்ளி விழாவும் காண்பது
பேறாகப் பெற்ற பேறு இணையர்கள்…

Nada Mohan
Author: Nada Mohan