வசந்தா ஜெகதீசன்

பெற்றோரே…
பேறுகள் பலவாகி
பெரும்பேறும் வாழ்வாகி
சேய்களின் காப்பாகி
செம்மையுற வாழ்ந்தவர்கள்

செப்புகின்ற பட்டறிவும்
சீராக்கும் வாழ்வறமும்
காப்பரணாய் வேலியிட்டு
காத்திட்ட பெற்றோரே

கடனது பாரியது
காலத்தால் ஈடுசெய்ய முடியாது காத்திடமாய்
கணக்கிறது

ஞாலத்தில் நாம் வாழும்
நல் வாழ்வின் வெற்றியே
உங்களின் பாடுகளின்
உன்னதத்தை வெளிச்சமிடும்

வேராகி விழுதாகி
விருட்சமாய்
தொடர்கின்றோம்
தூரிகையாய் துலங்க வைத்தீர்
பேருவகைப் பேறு பெற்றோம்
பெருமையுடன் வாழ்கின்றோம்
நிதமுமாய் சான்றாகும்
நீங்களிட்ட அறமே
எம்மோடு
அறிவுரையே வாழ்வோடு!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading