அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 236

“குழலோசை”

மூங்கில் எமக்களித்த புல்லாங் குழலோசை
ஏங்கித்தவிக்க வைக்கும் பரவசஓசை
வேய்ங்குழலோசை மீண்டும்கேட்க மனதிலாசை
மயங்காதவரையும் மயக்கும் இனிய குழலோசை

ஆயர்பாடி கேட்டு மகிழ்ந்த அதிசய குழலோசை
ஆநிரைகள் மெய்மறந்து அதிக பால் சுரந்த அற்புத ஓசை
எம்காதில்பாய்ந்து கடமைகளை ஒழுங்கமைக்கும் குழலோசை
ஆலை,தொழிற்சாலை கூவி அழைக்கும் குழலோசை

ஆனந்தமாய் ஆரம்பித்து மரணபயமூட்டும் குழலோசை
பீரங்கி துப்பாக்கி வெடியோசை தந்திடுமே அவல ஓசை
ஆண்டவனை வேண்டி உயிர்பிழைக்கும் ஓர் நப்பாசை
காற்றில்லா நிலையில் நிலையில்லா குழலோசை!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading