அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

யாதும் ஊரே யாவரும் கேளிர்….

கேளிர் “

இந்த வரியின் தத்துவம் தமிழர் வாழ்வின் மகத்துவம்

சூழல் தரும் உறவிலே ஆழங்காணும் அற்புதம்

நாளும் நாளும் நட்பிலே வளர் பிறையின் வளர்முகம்

பேணும் கலை கலாசாரம் பெறுமதியின் உன்னதம்

பழகிக் கொள்ளும் பாங்கிலே பண்பாட்டின் புலமைகள்

உதவும் மனப்பங்க்கிலே ஈகை கொண்ட இன்முகம்

பூவைச் சேர்ந்த நாரைப்போல் புது மணம் பரப்புவோம்

தொழில்துறையின் வாய்ப்பிலே உடல் உழைப்பின் உயர்ரகம்

கடினம் கொண்ட உழைப்பிலும் கடமை வீரர் தமிழரே

முதன்மை நிலை உழைப்புக்கே முன்மாதிரியாய் திகழ்பவர்

பெற்ற தேட்டம் அனைத்துமே வித்தகத்தின் சான்றுகள்

கோபுரத்தின் கலசமாய் கொள்கை கொண்ட மகவுகள் -இளையவர்

அரச சாசனத்தின் வகுப்பிலும் சட்டமாற்றும் பொறுப்பிலும்

நாடகத் துறையிலும் நவின் கலை வாழ்விலும்

சாதனைகள் ஈட்டுறார் சரித்திரமாய் மிளிர்கிறார்

இரு இனங்கொண்ட வாழ்விலே இணைந்திட்ட போதிலும்

மகத்தான தமிழ்ப் பண்பை விதைத்தேதான் வாழ்கிறோம்

வந்த நாட்டு மணப் பெண்ணும் இன்பத் தமிழ் பேசுறார்

கலந்து வாழ்ந்த போதிலும் நாம் கலங்கரையின் விளக்குதான்
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading