annaikku nikarundo avaniyile

09.05.24
கவி ஆக்கம்-315
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே

அன்புக்கு விலையுண்டோ பவனியிலே
பொறுமைக்கு உவமையுண்டு தாயினிலே
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
உண்மைக்கு உரிமையுண்டு அன்னையிலே

எத்தனை துன்பம் வந்திடினும் மறந்து
அத்தனையும் கனிவோடு இன்பம் தந்து
தன்னுயிர்ச் சொத்தாகப் பாதுகாத்து
பத்து மாதம் தன் வயிற்றில் கரு சுமந்து
பெற்றெடுத்து இனிதாய் வளர்த்த பெருமை

தாயின் தரத்துக்கு வரமேது
சேய்க்குத் தலையிடி எனில்
தனக்கு வந்ததெனப் புழு போலத்
துடித்துத் துவண்டிடும் அருமை

நோய் வந்திடினும் பாயில் படுக்காது
நெருப்பில் வெந்து வாய்க்கு ருசியாக
வயிறார உண்பது பார்த்து மகிழும்
அன்னையே உனக்கு நிகருண்டோ
அவனியிலே அன்புத் தெய்வமே .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading