ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கவிதை நேரம்-09.08.2024 கவி இலக்கம்-1902 ஒலிம்பிக்கின் ஒளியில் ————-

Jeya NADESAN

கவிதை நேரம்-09.08.2024
கவி இலக்கம்-1902
ஒலிம்பிக்கின் ஒளியில்
———————
உலகம் பிரகாச ஒளியில் கதிரவன்
உலகின் முதன்மையான விளையாட்டில் ஒலிம்பிக்
கிறீஸ் ஏதென்சில் முதலாக உருவானது
ஐந்து கண்டங்கள் பெயரில் உருவானது
ஐந்து நிற வளையங்கள் வெண்மையில் பதித்தது
முப்பத்தி மூன்றாவது ஒலிம்பிக் பரிசில் ஒளிர்ந்தது
நூறு ஆண்டின் நினைவாய் வாழ்த்து பெற்றது
கோடைகால ஒலிம்பிக் விளையாட்டாய் மலர்ந்தது
தேம்ஸ் நதிக்கரை ஈபிள் கோபுரம் சிறந்தது
மின் ஒளி விளக்குகள் மின்னி ஒளிர்தது
வாண வேடிக்கை கோலாகலமாக சிறந்தது
பிரான்ஸ் ஜனாதிபதி தொடக்கினது பதிவானது
ஈழத்தமிழன் தர்சன் ஒலிம்பிக் சுடர் சாதனையானது
ஆண் பெண் சம பங்கானது பெயரானது
இலங்கை வீராங்கனைகள் பெயர் சரித்திரமானது
மாற்றுத் திறனாளிகள் காரணமாக அமைந்தது
ஒலிம்பிக் பல நாடுகளின் உறவுகள் பலமானது
உலகின் திருவிழாவாக பெருமை கொண்டது

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading