அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

மனித உரிமைகள்

கெங்கா ஸ்ரான்லி

எமது உரிமைகள் தொலைந்தது
எத்தனை வருடங்கள்
எதற்காக நாம் போராடினோம்
நினைவிலே நிறுத்துக
தாம் வாழும் நாட்டில்
தமக்கில்லை மனித உரிமைகள்
வேறு நாட்டில் கிடைத்தென்ன
கிடைக்குமா
தமிழ் மண்ணில் கிடைப்பது போலாகுமா
உலகெங்கும் மனித உரிமைகள்
பறிக்கப் படுகிறதே
இதைக் கேட்பவரில்லையா
வல்லினம் தானே மெல்லினத்தை
வதைக்கிறதே
வல்லினத்தை கேட்காதபடியால்
ஆணவத்தில் தலைதூக்கி ஆடுகிறது
இதையும் அனைத்துக் கண்களும்
பார்க்கின்றன
சில கண்ணில் நீர் வடிகிறது
சில கண்ணில் கனல் பறக்கிறது
சில கண்ணில் ஏளனம் தெரிகிறது
மனிதம் இல்லா மனம் சிரிக்கட்டும்
மனிதமும் ஒரு நாள் ஜெயிக்கும்
மனித உரிமைகளும் அங்கு கிடைக்கும்
உரிமை மீறலுக்கு ப் போராடி போராடி
தோத்தது போதும்
விடியல் கிடைக்கட்டும்!

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading