முயற்சி மலையளவு..

வியாழன் கவி 2269

முயற்சி மலையளவு..

சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த மனிதம்
கற்றிடப் பாடம் உண்டாம்..

அலைகடலில் அகப்பட்ட
சிறு துரும்பும் கரை சேர
போராடியே வெல்லுகிறதே
நீரோடி எதிர் நீச்சல் போடுதே..

கல்லுக்குள் தேரையும்
உணவுண்டு அறிந்தே தான்
உயிர் தருத்தே வாழ்கிறதே
இதுவே இயற்கையோ..

முயற்சி கொண்ட மனமே
தயக்கம் இன்றி வாழும்
உயற்சி கொண்டு ஆழும்
உலகை வென்று சேரும்..
சிவதர்சனி இரா
8/1/2026

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading