மொழியே என் முகவரி..!!(2390)

மொழிதனை இயம்பிட்ட மழலைகளாய் நாம், தாய்மொழிதனை கேட்டு கருவறையில் கண்ணுறங்கும் போதே கற்றிட்ட சிசுக்களாய் நாம்! இவ்வுலகில் அவதரித்த பொழுதினிலே, “அம்மா” என்ற மூன்றெழுத்து...

Continue reading

மொழியே முகவரி

மொழியே முகவரி

மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு வாழ்ந்திட
வழிகாட்டும் எம்மொழி

வரலாற்றைத் தாங்கி நிற்கும்
பண்பாட்டைக் காத்து நிற்கும்
தலைமுறையை இணைக்கும் பாலம்
தரணியிலே மொழிதானே!

சந்ததியை காக்கும் மொழி
விந்தனையை உருவாக்கும் மொழி
சிந்திக்க சிறகாகும் மொழி
எத்திக்கும் எம்தாய்மொழிதான்

பன்மொழி தேசத்தில் எம்மொழியும் பேசிட
செம்மொழியாய் சிறகுவிரிக்கும்
வேரான தாய்மொழிக்கு ஏது ஈடாகும்
சந்ததிகளே! எம்மொழி காக்க எழுந்திடுவீர்
செந்தமிழ் பேசும் சிப்பிகளாயும் வலம்வருவீர்!!!

காலங்கள் மாறினாலும்
கலாசாரம் மறையாமல்
வேர்களைப் பற்றிக்கொண்டு
விழுதுகளே!உயருங்கள்!1

மொழியே முகவரி
மொழிந்திடுவீர்
எட்டுத்திக்கும்!!

நகுலா சிவநாதன்1874

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading