அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
இதெல்லாம் இப்போ எங்கே
கவி 753
இதெல்லாம் இப்போ எங்கே
மனித உரிமையென்று வாய்கிழியச் சத்தம்
தணிந்ததா இதுவரையில் மானிடர்க்குள் யுத்தம்
புனிதராக எவருமில்லை உள்ளமில்லை சுத்தம்
தனிமனித உரிமைபெற போராட்டமே நித்தம்
சாதியென்றும் மதமென்றும் ஆறாமறிவு பார்க்கும்
பாதியிலே வந்தவற்றை பரம்பரைக்குச் சேர்க்கும்
விலங்குகள் பறவைகள் வாழ்க்கையதோ அருமை
விலக்கிவைத்து வாழ்வதிலே மனிதருக்குப் பெருமை
மோலோர் கீழோர் என்கின்ற பாகுபாடு
ஆள் யாரென ஆராய்சியில் ஈடுபாடு
கேட்டால் நாங்கள் ஓரினமே பிரிவேது
தீட்டாய் எண்ணிடுவார் தன்மட்டில் வரும்போது
வீசுகின்ற காற்றும் பேதம் பார்ப்பதில்லை
வாசத்தை தருகின்ற மலர்களுக்கும் பேதமில்லை
வெளிச்சந்தரும் ஆதவன் உயர்ந்தவர்க்காய் உதிப்பதில்லை
இழிவுநிலை எண்ணமதோ மாந்தர்க்கு மாறவில்லை
மனிதம்பற்றி சிந்திக்க மனிதன் மறந்துவிட்டான்
குனிந்தவனை குட்டிக்குட்டி பெருமைகொள்ள பழகிவிட்டான்
தீண்டாமை சட்டப்பிரிவு பதினேளால் பயனில்லை
ஆண்டவரின் கோவிலுக்குள் செல்வதற்கும் தடையெல்லை
ஜெயம்
11-12-2024
