சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

வாழ்வில் கலை”யும் தொடரா நிலை”யும்”

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-48
06-02-2025

வாழ்வில் கலை”யும் தொடரா நிலை”யும்”

கலையொரு அழகிய கோலம்
கதை சொல்லும் கவிதையும்
பாடலின் இனிய ராகமும்
நடனம் ஆடும் நதியுமிது!

நிலையற்ற வாழ்வின் தருணத்தை
நெகிழ்வாக்கி சிந்திக்கவைக்குதே
வாழ்வின் நதியில் கலையுமிங்கே
வலித்தபடகாய் தொடராநிலையில் வழிநடத்துதே

பூமிப்பந்தும் யுத்தமும் மொத்தமுமாய்
பூகம்பமுமாய் உருளுதிங்கே நித்தமும்
கடந்தாக நிர்ப்பந்தமும் விதிக்குதிங்கே
கலையிங்கே தொடரா நிலையில் சவாலை எதிர்கொள்ள வைக்குதிங்கே

விந்தை நிறைந்த உலகின்
விஞ்ஞான வளர்ச்சி சிந்தை
நிறைந்த கற்பனை கலை ஊடகமா??
நீறுபூத்த நெருப்பா சிந்திப்போமா?

அன்றைய கலையிங்கு தொடராநிலையிலும்
அதனால் மனிதன் ஜெயிக்கிறான்.
அர்த்தமுள்ளவனாய் தன்னை மாற்றுகிறான்
ஆங்கே தன்னை வளமாக்குகிறான்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading