தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்….
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…….
நிஜத்தில் இது சாத்தியமா?
நினைத்துப் பார்த்தேன்
ஏமாற்றமே என் வாழ்வில்
ஏன் என்று எண்ணிப் பார்த்தேன்
எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணமே மேலோங்கிற்றே
ஆரும் காணாத அந்த சக்தி ஆட்டுகிறது
பாரும்! மனிதன் நினைப்பது ஒன்று தெய்வம் நினைப்பது ஒன்று என்றேமுன்னோர்
சொன்னது உண்மை தானே
இன்னல்களும் இடர்களும்
எல்லாம் அவன் செயலே
துன்பங்களைக் கண்டு துவண்டு போகாது
மீண்டெழுந்து மிகுதியாய் உழைத்து
வேண்டுதல் செய்ய, வேண்டும் எமக்கெது என்று
ஆண்டவன் நிச்சயத்தில்
அதுவே கிடைக்கும்!
கிடைத்ததையிட்டு மனநிறைவு கொண்டால்
அடையும் ஆனந்தம் அதிகம்
அல்லாவிடில் அதிகமாகும் உழைச்சலே!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு நன்றியுணர்வுடன் நடந்திடுவோமே!
இறுமாப்பு வேண்டாமே!
நன்றி வணக்கம்
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்குப் பாராட்டுகள்! திரு.திருமதி வாணி மோகனுக்கு மிகுந்த நன்றி கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!
நடந்திடுவோமே
