நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

சக்தி சங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
மாசி
******
அறுசீர் விருத்தம்
சீர்வரையறை: காய் காய் காய்/ காய் காய் காய்

மாதங்கள் பன்னிரண்டில் மாசிமகம்
மகத்தான பெருவிழாவாய்க் கொண்டாடி
பூதலத்தோர் நீராடி மகிழ்ந்திடுவர்
புதுமையான காட்சிகளும் கடற்கரையில்
மாதவமும் செய்தேன்நான் மாசியில்தான்
மாங்கல்ய நாண்பூட்டு விழாவதுவும்
நாதஸ்வ ர ஓசையோடே நடந்தேற
நறுமணமாய் மாலைகளும் மாற்றினோமே!
உடன்பிறப்பு மூத்தண்ணன் கலந்துகொண்டு
உரிமையோடு தேங்காயை உடைத்திட்டார்
கடந்துபோன விழாவிலேதான் கடைசியாகக்
கண்டேன்நான் அவர்உருவம் என்செய்வேன்
அடங்காத ஆணவத்தை அடக்கத்தான்
அடிமுடியைத் தேடவைத்தார் அரனவர்தான்
மடமையைத்தான் ஏற்றனரே பிரமவிஷ்ணு
மகாசிவராத் திரியும்தான் மாசியிலே!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan