சாமினி துவாரகன்

பங்கு(நீ)

கனவுக்குள் பூத்த
கனவானும் நீயே !
கண்ணுக்குள் மணியான
கணவனும் நீயே !

ஆயுளுக்கும் தொடர் ந்திடும்
அன்புருவும் நீயே !
ஊடலில் கொல்லும்
காதலனும் நீயே !

தாகத்தை தீர்த்திடும்
தண்ணீரும் நீயே !
தவிக்க விட்டு பார்த் திருக்கும்
பாவியும் நீயே !

பின் பனிக்கால
உறவும் நீயே !
என் வாழ்வின்
பங்கு(நீ )யே!!

நன்றி
சாமினி துவாரகன்
2025.09.12

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading