இயற்கை வரமே இதுவும் கொடையே

ராணி சம்பந்தர்

இயற்கை வரமே
இதுவும் கொடையே

மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும் காற்று
சுவாசம் செய்ய உற்ற துணை
ஆன இயற்கை வரம் என்பதே
இதுவும் தந்த கொடையே

அழைத்து வரும் இடி மின்னல்
புயலினால் தழைத்தோங்கிய
மரமும் அடி வேரோடு சரியவே
கூடவரும் வெள்ளப்பெருக்கு

அதை வடியச் செய்து அந்தரத்தில்
விதைத்த விதைகளோ மீண்டுமே
ஆகாசமாய் வளர்ந்து பல உயிர்
இனங்களிற்கும் பலன் தருமே
அமுதசுரபியாய் வாழ்த்திடவே
வணங்கிடுவோம் இயற்கை
வரமே இதுவும் கொடையே என.

Author:

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading