உணர்வு

ராணி சம்பந்தர்

ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே

அறிவில் அடைத்த சிந்தனை
தங்கிப் புழியும் புரிந்துணர்வு
முக்கித் தக்கி உடைக்குமதன்
விழிப்புணர்வு உருவாகிடுமே

ஆளிற்காள் வேறுபடும் அன்பு,
பொறுமை, விட்டுக் கொடுப்பு,
உதவிடும் மனசு பருவம் தேறி
ஊறிய உணர்வு கருவாகிடுமே

பாழாய்ப்படுத்தும் முற்கோபம்,
ஆணவம் தேளாய்க் குத்தியே
சூழும் சுழல் காற்றில் சிக்கிட
பாழுங்கிணறில் அமுக்கிடுமே

குற்றுணர்வின் மன உழைச்சல்
விரக்தி மனப்பான்மை அமைதி
குலைக்கத் துடிக்கும் இதயமோ
தெருவில் சருவாகித் தூக்கிடுமே

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading