நினைவுகள் கனக்கின்றதே

இரா.விஜயகௌரி
ஆயிரம் கனவுகள் சுமந்தது வாழ்க்கை
அனுதினம் தாய்மடி சுமந்தவர் சரிதம்
நினைந்து நினைந்து நினைவுகள் ஏந்திட
காலமும் சுழலுதுகழலடி பணிந்தே

வேரும் விழுதும் வேரடி மண்ணும்
குருதிக் கனலுள் உழன்றது கண்டீர்
உயிர்த்துளி காவிய உணர்வின் மொழியை
உயிர்ப்புடன் ஏந்திய காவலர் சென்றார்

விடியலில் எழுதிய வெந்தணல் வேட்கை
நினைவினுள் தகித்தெழ உயிர்மடி தந்தே
சாவினைத்தழுவிய சாகா வரங்கள்
சரித்திரத் தேடலில்சந்தணப் பேழைகள்

பொறித்தெழும் தடங்கள் பொய்த்ததுமில்லை
நினைத்தவை செயல்கொள தயங்கியதில்லை
தரணியின் வாழ்வை தவமாய்த் தாங்கி
தாய்மண் மீட்பினை சுமந்தன உடல்கள்

விழிகளுள் தாங்கிய விழுப்புண் சுவடுகள்
இவர் வெந்தணல் விழுங்கிய உயிர்ப்பின் தவங்கள்

Author:

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading