விடுப்பு..!!

விடுப்பு விடுமுறை பயணம் நன்றாய் அமைய வேலைப் பழுவும் கொஞ்சம் அதிகரிக்க ஆலயங்கள்திருவிழா அயலில் கொண்டாட அலுப்பு இன்றியே நானும் நகர்ந்திட உடலும் கொஞ்சம் உற்சாக பெற்றிட தண்ணீர்...

Continue reading

தியாகம்

தியாகம்
செல்வி நித்தியானந்தன்

தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்

தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில் வாழ்ந்த
தியாகச் செம்மல்கள்

பெற்றவர் தியாகம்
பெருமையில் என்றும்
அருமை தெரியாத
சேய்களின் அலட்சியம்

தியாகம் பலரகம்
கண்ணுக்குள் என்றுமே
காலத்தால் அழியாத
காவியத்து தியாகங்கள்

செல்வி நித்தியானந்தன்

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading