உறைபனி 97

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026

பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும் புதர்களும் புகலிடம்
புரியாத புதுமையாய் மறைய

பசுமை போர்த்திய காடுகளெல்லாம்
பனித்திரை போர்த்திப் படுத்திருக்க
உயிர்ப்பின் ஓசை அடங்கிப்போய்
உறைபனி ஆளுமை செய்கிறது

பச்சை இலைகள் மறைந்து போக
இச்சை இன்றி உலகம் உறங்க
காலத்தின் ஓட்டம் உறைந்து இங்கு
கவிதை பாடுது உறைபனி என்று!

ஒரு இராத்தல் பாண் வாங்க
பல இராத்தல் உடை போட்டு
உறங்க முடியாமல் கால் வலியும்
உயிரை வாங்குதே உறைபனியும்

உறைபனி உருகினால் நீராகும்
உள்ளப்பகை உருகினால் உறவாகும்!
உறைந்த மனங்கள் உருகிவிட்டால்
உலகம் முழுதும் வசந்தமாகும்!

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading