மாற்றத்தின் ஒளியாய்-2140 ஜெயா நடேசன்

புத்தாண்டின் விடியலில் பொங்கியே புத்தொளி மலரட்டும் புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும் புவியாழும் இறையோனின் பார்வையாய் இருளான...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

ராணி சம்பந்தர் மாற்றத்தின் ஒளியாய்த் தங்கியே மலர்ந்திடுவாய் முற்றத்திலே சுற்றமோடு பொங்கி மகிழ்ந்திடுவாய் வற்றா ஊற்றாய்ப் புலரும் சூரியனை வரவேற்றிடவே சுற்றவரக் கோலமிட்டிட முக்கல்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

ராணி சம்பந்தர்

மாற்றத்தின் ஒளியாய்த்
தங்கியே மலர்ந்திடுவாய்
முற்றத்திலே சுற்றமோடு
பொங்கி மகிழ்ந்திடுவாய்

வற்றா ஊற்றாய்ப் புலரும்
சூரியனை வரவேற்றிடவே
சுற்றவரக் கோலமிட்டிட
முக்கல் வைத்துப் பொங்கல்
பானையில் இட்ட பால்

பொங்கி வர சிவப்பு அரிசி,
சர்க்கரை இனிப்பிட முக்கனி,
கரும்பு, மரக்கறி படைத்திட
மாரி காலம் மறைந்து கோடை
உதித்து விவசாயம் செழிக்க

தை பிறந்தால் வழி பிறக்குமே
இதை நம்பியோர் மனமதுவோ
வாழ்வில் அன்பு ,இனிமையில்
கனிந்திட மாற்றத்தின் ஒளியாய்
நல்வழியே என்றும் காட்டிடுவாய் .

Author: