மாற்றத்தின் ஒளியாய்-2140 ஜெயா நடேசன்

புத்தாண்டின் விடியலில் பொங்கியே புத்தொளி மலரட்டும் புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும் புவியாழும் இறையோனின் பார்வையாய் இருளான...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

ராணி சம்பந்தர் மாற்றத்தின் ஒளியாய்த் தங்கியே மலர்ந்திடுவாய் முற்றத்திலே சுற்றமோடு பொங்கி மகிழ்ந்திடுவாய் வற்றா ஊற்றாய்ப் புலரும் சூரியனை வரவேற்றிடவே சுற்றவரக் கோலமிட்டிட முக்கல்...

Continue reading

மாற்றத்தின் ஒளியே 783

ஒவ்வொரு தோல்வியும்
ஒரு கதவாய் திறந்தது,
ஒவ்வொரு முயற்சியும்
ஒரு பாதையாய் பிறந்தது

சுமையாக இருந்த நினைவுகள்
தமை காற்றில் கரைந்தன
கண்ணீராய் விழுந்த வலி
பின்னாளில் ஞானத்தை பகிர்ந்தன

வீழ்ந்து கிடக்கையில் துணிச்சல் முளைத்தது
தாழ்ந்தே உயர்ந்திடினும் பணிவு நிலைத்தது

மாற்றம் வந்தது
இடித்துச் சிதைக்க அல்ல
ஏற்றிவிட்டு என்னை புதுப்பிக்கவே மெல்ல

நேற்றைய நிழலின் மேல் இன்று நிற்கவில்லை
தோற்காத நாளின் வெளிச்சத்தின் வாசலின் எல்லை

மாற்றத்தின் ஒளியே என் பயங்களை துரத்து
ஓட்டியே பலவீனங்களை பலத்தினை நிரப்பு

ஜெயம்
15-01-2026

Author: