நம் வாழ்வின் வேர்கள் 96

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-10-2026

தாயின் மடியும்
தந்தையின் பாசமும்
உறவுகளின் அரவணைப்பும்
நம் வாழ்வின் வேர்கள்

உயர உயரப் பறக்க
ஊர்க்குருவியும் பருந்தாவது போல்
கண்ணுக்குத் தெரியா அன்புகளும்
கடந்து வந்த பாதைகளும்…

கற்றுத் தந்த பாடங்களே
நம்மைத் தாங்கும் வேர்கள்
காலம் என்னும் புயல்
கிளைகளை அசைத்தாலும்

வாழ்வு என்னும் மரத்தின்
வேர்களைப் பற்றி நின்று
மீண்டும் துளிர்விடுவோம்
நம் வாழ்வின் வேர்களோடு.

Jeba Sri
Author: Jeba Sri

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading