மாட்டுவண்டி

வஜிதா முஹம்மட் மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு மாமன்மகள் ஏத்திக்கிட்டு காரைநகர் போகப்போறன் காலையில வாடிபுள்ள கும்பிமணல் வீதியில கூட்டுரோட்டு சந்திய செவிளனி வாங்கித்தாரன் செல்லமுத்தம் தாடிபுள்ள வயசுக்கு...

Continue reading

எழுச்சிப்பெண்…2401

எழுச்சிப் பெண்!!
வியாழன் கவி-2401

மாலதி என்றொரு
அழகிய நாமம்
மலர்ந்தது மண்ணில்,
சுதந்திர வேட்கை தாங்கி!

இன விடுதலைப் போரிலே
முதல் களப்பலியான
சகாயசீலியாய்,
தன் தேசத்தின் விடுதலைக்காய்
உயிரினைத் துச்சமாய்த் தந்த
வீரமங்கை இவள்
வரிப்புலி ஆடை அணிந்து,
தோள்களிலே துப்பாக்கி ஏந்தி,
தன் உயிரை
மண்ணுக்காய் தானம் தந்து
வரலாறானாள்!

தமிழீழப் பெண்களின்
எழுச்சியின் நாளாம்
அக்டோபர் பத்திலே,
அனைத்து இதயங்களும்
அந்த வீரப் பெண்ணை
நன்றியோடு நினைந்து
கைகூப்பி வணங்குகின்றன!

குட்டக் குட்டக்
குனிவதெல்லாம்
பெண்மையின் பண்பல்ல;
தக்க தருணம் வந்தால்
தலைநிமிர்ந்து,
துணிச்சலோடு நின்று
ஆற்ற வேண்டிய காரியங்களை
ஆளுமையோடு செய்பவளே
எழுச்சிப் பெண்!

இத்தரை மீதிலே
இவளைப் போல
எண்ணற்ற எத்தனையோ
மங்கையர்
மாதவம் செய்து,
மண்ணுக்காய் உயிர்தந்து,
வரலாற்றில் தடம் பதித்தனர்!

அவர்தம் தியாகம்
என்றென்றும் வாழட்டும்;
அவர்தம் நினைவு
எம் நெஞ்சங்களில்
என்றும் நிலைத்திருக்கட்டும்!

சிவதர்சனி இராகவன்
சுவிட்சர்லாந்திலிருந்து
8/10/2026

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading