15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே
இரா.விஜயகௌரி
வித்தகப் பொறிமுறை
விரல் வழிஎழுத-சித்திர
வாழ்வின் செழிப்பின் தொடரை
கற்றலின் படியே காசினி எழுதும்
கொற்றவை தொட்டிடும்
கற்றவன்...
இரா.விஜயகௌரி
வித்தகப் பொறிமுறை
விரல் வழிஎழுத-சித்திர
வாழ்வின் செழிப்பின் தொடரை
கற்றலின் படியே காசினி எழுதும்
கொற்றவை தொட்டிடும்
கற்றவன் கூட-பொற்கிழி
பெற்றிட கடலென மொழிவான்
கனிந்திட தொடர்வான் -வென்றிட
நித்தமும் வாழ்வின் படிமுறை தொட்டு
அள்ளி அள்ளி அமிழ்தெனக் கல்வி
செழிப்புறு வண்ணம் நிறைத்திடும் ஆழி
கொடுத்தும் விரித்தும் நிறைவுறத் தொடரும்
நிலையெனக் கல்வியின் சொத்தை வழங்கி
நிமிர்ந்தே எழுதிட பலத்தினை நல்கி
விரிந்த உலகில் பரந்து விதைத்திட
கற்றலின் படிதாம் காசினி உயர்வே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.