நிறம் மாறிய வாழ்க்கை

அன்று இளமை வசந்தங்களை சூடியது
இன்று முதுமை நலமுதிர்த்து வாடியது
கோலத்துள் புதைந்ததோ கனவுகள் ஆயிரம்
காலம் வரைந்ததோ அழியாத ஓவியம்

சிறகடித்து பறந்த ஆசைகள் எங்கே
உறவுவிட்டு தவிக்கின்ற ஆத்மாவாய் இங்கே
சித்தரிப்பே வாழ்க்கையது என்கின்ற தன்மை
உத்தரித்த பின்னரன்றோ புரிகின்றது உண்மை

புன்னகைப் பூக்கள் உதிர்ந்திட்ட பொழுது
மண்ணக வாழ்வும் நகருமே அழுது
விதியின் தூரிகை மாற்றியதே நிறத்தை
மிதிப்பது முறையோ படப்போகும் மரத்தை

புன்னகையும் கண்ணீரும் இருவேறு காவியமாம்
இன்றுபோல் நாளையில்லை என்பதுவாய் சீவியமாம்

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading