K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 159

பரவசம்
நீராடி
நீறு பூசி
வெள்ளை வேட்டி
வெள்ளை அங்கவஸ்திரமும்

மித வண்டி
மிதித்து
எம் பெருமான்
வர்ணனை
வீதி எங்கும்
கேட்டு

அவன்
தேர்
தருசனம்
காணுகையில்
தங்கத்திற்கு
தங்கம் பூட்டி
தக தக

வெய்யோனின்
பள பளக்க
நல்லூர் கந்தா
உன் அழகில்
மெய் மறந்த
பரவசம்
எனக்கு

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading