Vajeetha Mohamed

உன்னதமே உன்னதமாய்

பாடசாலை செல்லாத
புத்திசாலி
பல்கலைக்கழகம் காணாத
பட்டதாரி

பக்கத்துவீட்டு பாத்திமா ராத்தா
வீட்டுவேலே செய்து
விடிய விடிய அடையப்பம் அவித்து
ஊரையே சுற்றி ௨ழைக்கும் கரம்

உன்னதமே உன்னதமாய்

மாற்றுத்திறனாளி துணை
மனநோகா சேவை பணி
நான்கு பிள்ளைகள் இணை
வ௫மானம் மீட்டி வம்சத்தைக்
காத்த எதிர்வீட்டு சல்மா ராத்தா

மலடி என ஊர்பட்டம்
மாற்றி அமைத்தார் மகவு இரண்டு
தத்தெடுத்து தனதாக்கி
க௫ சுமக்காமல் தாயானார்

என் சாச்சி சாகிறா

கரம் இரண்டும் விபத்தில் இழந்து
கை நீண்டா ௨ழைப்பாளி
காலை முதல் மாலைவரை
கீரை மரக்கறி தன்தலைசுமந்து

௨ழைக்கும் நேசம் அக்கா

தள்ளுவண்டியிலே அவல்கஞ்சி
தள்ளாடும் வயது இவரை மிஞ்சி
வெள்ளிதோறும் இலவசம்
வெறும்கையோடு இ௫ப்போ௫க்கு
பசிபோக்கும் காசீம்நானா
வண்டி

சிறுகச் சிறுகச் ௨ழைத்து
சிரமங்கள் தொடர்ந்து
வறுமை தடை ௨டைத்த
சிறுவர் தொழிலாளி இவர்

வாழும் போதே பலரை
வாழவைத்த
உன்னதமே உன்னதமான
என்பெற்றோர்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading