03
Mar
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி...
26
Feb
வரமாகும் வாய்ப்புகள்
-
By
- 0 comments
இல 79
வரமாகும் வாய்ப்புகள்
வரமாகும் வாய்ப்புகள் வந்தால் வாழ்வில் வளம் பெருகும்...
26
Feb
வரமாகும் வாய்ப்புகள்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
போட்டியுமே இல்லா பொறுமை வேண்டும்
பொசுங்கிடாத வாழ்வைப் போற்ற வேண்டும்
கூட்டினிலே வாழும் குருவி...
” அடையாளம் “
ரஜனி அன்ரன்
“ அடையாளம் “ கவிதை….ரஜனி அன்ரன் (B.A) 20.06.2024
இனத்தின் அடையாளம் மொழி
மொழி பண்பாடு வரலாறு
எமை இனங்காட்டும் அடையாளங்கள்
அடையாளச் சின்னங்களை
பண்பாட்டு விழுமியங்களை
புலம் பெயர்ந்தாலும்
கண்போல காத்திடுவோம் !
அநீதியின் ஆதிக்கம் போரின் அனர்த்தம்
வாழ்விடத் தொலைப்பு வறுமைக்குள் தவிப்பு
தந்தது புலம்பெயர்வினை
அடையாளமானது அகதியெனும் முத்திரை
தஞ்சம் தந்த தேசத்திற்கு நன்றி !
அன்பு தந்த அன்னை மண்ணை விட்டு
அலைகடல் கடந்து அந்நிய தேசம் வந்தாலும்
அகதியாகி சகதியெனும் சேற்றுக்குள் மூழ்கினாலும்
அடுத்தடுத்து சவால்களை எதிர்கொண்டாலும்
அயராத கடின உழைப்பும் விடாமுயற்சியும்
அள்ளித் தந்தது நிரந்தர உரிமையை !
அடுத்த சந்ததி அடையாளத்தோடு வாழ
எம் மொழியையும் பண்பாட்டையும்
வரலாறாய்ப் புகட்டி நிற்போம் !
Author: Nada Mohan
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...
24
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
வரலாறு பலபாகம்
வழிகூறும் பலகாலம்
தமிழ்ப்பள்ளி உருவாக்கம்
தரணிக்கே தனிமகுடம்
உறவுகள் ஓன்றாகும்
உயிர்ப்பு மொழி தமிழாகும்
அடுத்த தலைமுறையும்...
24
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-02-202
ஆங்கிலம் பேசும் தேசத்தில்
அன்னைத் தமிழ் ஒலிக்கிறது
அள்ளித் தந்த தமிழ்ப்பள்ளிக்கு
அனந்த...