06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-264.
கவித்தலைப்பு!
” விழிப்பு”
எப் பாலர்க்கும் வேண்டும்
விழிப்பு – மீண்டும்
இழந்த நாட்டை
மீட்க வேண்டும்
என்னும் விருப்பு!
அதற்காகக் கட்டாயம்
புலம்பெயர்ந்த
நம் தாய்த் தமிழ்
உறவுகளுக்கு வேண்டும்
விழிப்பு!
கொத்தணிக் குண்டுமழையில் – சிங்கள இனவெறியில்
பன்னாட்டுச்
சூழ்ச்சி வலையில்
தமிழ் இன அழிப்பை
மே 18 ஐ நினைத்து
எரியட்டும் விழிப்பு
எனும் நெருப்பு
பகை முடிக்க
எப்பொழுதும்
நமக்கு வேண்டும்
விழிப்பு!
. அபிராமி கவிதாசன்.
07.05.2024
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.