வர்ண வர்ணப் பூக்கள் 65

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025

வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி
காலமெல்லாம் மகிழ்ச்சி

கொடியில், செடியில், நீரில்
காலை, மாலை, இரவு
பச்சை, சிவப்பு, மஞ்சள்
பல வகையாய் வண்ணமாய்

பள பளவென மலருமே
பற்றி கொண்ட மனவருத்தம்
பறந்துமிங்கே போய்விடும்
பட்டாம் பூச்சியாய் பறந்நிடுவோம்

மணவறை பிணவறையென
மனிதரோடும் ஒன்றிடும்
சில இதழ் விழுந்தாலும்
சருகாகி மீண்டேழும்….

Jeba Sri
Author: Jeba Sri

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading