இதெல்லாம் இப்ப எங்கே..

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை நேரத்துக்காக…

இதெல்லாம் இப்ப எங்கை..!!

மனிதர் என்ற போர்வையில்
மனதை முடக்கிய ஆசையில்
அலையும் ஜீவ இராசிகளே
கேளும் எங்கு மனித உரிமை..?

இனம் என்று அடக்கியே
இற்றை வரை ஓயாத போராகி
இழந்த உயிர்கள் எத்தனை
இதை மீட்டுத் தருவார் யாரையா..?

நாட்டுக்கு நாடு போராட்டம்
நாசமாகுது இயற்கை நீரோட்டம்
ஆயுத முனையில் அகங்காரம்
ஆட்டிப் படைக்குதே பணபலம்..!!

மனிதரை மனிதர் வீழ்த்திவிட
மண்ணில் எத்தனை சூதாட்டம்
நரம்பிலா நாக்கின் ஆர்ப்பாட்டம்
நரபலி கேட்குதே கலி காலம்..

பெண்ணின் வாயைப் பூட்டியே
வாழ்ந்த காலம் மலையேற்றம்
ஆயினும் திருமண வாழ்வியலும்
இரண்டாகும் பாதகம் குத்தாட்டம்..

உயர்வாய் ஆக்கிய ஒழுக்கங்கள்
உதாசீனம் ஆகுதே காலமாற்றம்
உரிமைகள் இழந்த பிறப்பாகி
உணர்வுகள் கசிவதே முடிவாமோ..
சிவதர்சனி இராகவன்
12/12/2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading