30
Apr
தினம்தினமாய்….
வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்----
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்
வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து...
கைக்குள் கையாய்கைத்தொலைபேசி……….
கைக்குள் கையாய் -நமை
கையகப்படுத்தும்
வலையகப்பின்னல்
வையகம் தொட்டெழும்
பிரியாத் தோழி-அவள்
பிணைத்தெழும் ஆழி
வினாடியுள் நுழைந்து -நமை
விரயமும் செய்திடும் அரக்கி
நல்லவை தொடுவாள்-நமை
நாணிடவும் வைப்பாள்
தனை தொட்டவர் தம்மை
அவர் பயன் தனில் நிறைப்பாள்
இவள் இல்லா நொடிகள்
இழந்தவை போல் தொடும்
காலச்சுழலில் கலந்து எழுந்து
உழைப்பவர் தமக்கு உயிரும் தருவாள்
பயன் கொள வைத்தால்
ஊனாய் நிறைவாள்
உழன்று கிடந்தால்-நமை
உளைச்சலில். நிறைப்பாள்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.