தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

உழைக்கும் உலகை வாழ்த்தும் தினம்

கவி 722

உழைக்கும் உலகை வாழ்த்தும் தினம்

உழைப்பே உருளும் உலகின் மூலதனம்
உழைப்பை காணாது நகராது தினம்
மனிதகுலத்தை உயர்த்திடும் உன்னத கரங்கள்
பணிசெய்தே ஓய்வின்றி அடைவாரே சிகரங்கள்

விலைமதிப்பற்ற வியர்வை துளிகளைப் பாருங்கள்
களைத்தோரை சேர்ந்தே கொண்டாடுவோம் வாருங்கள்
நாட்டின் அபிவிருத்திக்கு இவர்கள்தான் ஆணிவேர்
கூட்டில் அடைபடாத பறவையினமாய் பறபார்

ஆயுளுக்கும் தாம்செய்யும் தொழிலையே நேசிப்பார்
தேயினும் தேகமது ஓயாமல் சுவாசிப்பார்
செய்யும் வேலைக்கு இல்லையென்றாலும் முதலாளி
மெய்யாகவே மெய்யை வருத்திடுவானிந்த தொழிலாளி

எத்தனை எத்தனை துறைகளுந்தான் இங்கே
அத்தனையிலும் அயராத உழைப்போர்கள் அங்கே
வெற்றியோ தோல்வியோ முடிந்தவரை போராட்டம்
வற்றாத உற்சாகத்தால் நாளுமிந்த தேரோட்டம்

வியர்வையாளரை வாழ்த்திடவே வந்ததோர் நாள்
உயர்ந்தவராம் உழைப்பவரை கொண்டாடிடும் திருநாள்
உடல் உளம் சோராத ஊழியனே
கடலளவை கரங்கொண்டு படைப்பவனே வாழியவே

ஒதுக்கப்படவும் அடக்கப்படவும் அடிமையல்ல நீயின்னும்
திருத்தப்படாத சட்டங்களும் திருத்தப்படுமது திண்ணம்
கேள்விக்குறியாய் வளைந்து தொடரினும் காலங்கள்
வாழ்வும் போடட்டுமே அழகான கோலங்கள்

ஜெயம்
01-05-2024

Nada Mohan
Author: Nada Mohan